Mobile

விற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமாகியது, இந்த ஸ்மார்ட்போன் இதன் விற்பனையினை இன்று அமேசான் வலைதளத்தில் துவக்கியுள்ளது.

1.   கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.12,999

2.   கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.15,999

விற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இது, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது

4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள நோக்கியா 8.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போனின் அமேசான் விற்பனை!

TechNews Tamil

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் 108MP கேமரா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil