Mobile

சீனாவில் அறிமுகமானது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் சீனாவில் கேலக்ஸி எம்01 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இந்த கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளேவினையும், 720×1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 மற்றும் 650MHz IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினையும் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்!!

இந்த கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வசதியையும் மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினையும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யுஐ கோர் 1.1 கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது.

இந்த கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமராவினையும் முன்புறத்தில்  8 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்,  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

நாளை அறிமுகமாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil

சீனாவில் ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil