மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்த கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக One UI 4.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் முன்புறத்தில் 8எம்பி கேமரா கொண்டுள்ளது.
கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.