சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது, பின்பு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்
கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.