சாம்சங் நிறுவனம் சமீபத்தில் புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போனை வியாட்நாமில் அறிமுகம் செய்தது.
சாம்சங் கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை- ரூ.24,481
இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டினை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் உடன் மாலி-ஜி72 ஜிபியு வசதி போன்றவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.