Mobile

விரைவில் வெளியாகவுள்ள கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தமாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்றாலும், இது மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்றே கூறப்பட்டு வருகிறது.

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வசதிகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்த கேலக்;ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில், இது 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது., மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

இது, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியுட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் விற்பனைக்கு வரவுள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!!

TechNews Tamil

பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ள விவோ Y20s G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil