சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய மாடல் போனான கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது, கேலக்ஸி ஏ 50 எஸ்க்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கேலக்ஸி ஏ 11 க்கும் வரவேற்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதாவது இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்த ஃபிரேம் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதன்மூலம் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் சிறிய பன்ச் ஹோல் கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டு இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரியைப் பொறுத்தவரை, 2 ஜி.பி. ரேம், குறைந்தபட்சம் 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் புதிய ஒன் யு.ஐ. 2.0 கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேமராவைப் பொறுத்தவரை மூன்று பிரைமரி கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.