எச்எம்டி
குளோபல் நிறுவனம் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டது.
கேமராத்துறையை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பும், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 எம்பி அளவிலான வைட் ஆங்கிள் கேமரா + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் போன்றவையும் உள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கும் தன்மையானது.
மேலும் 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS / A-GPS மற்றும் USB Type-C போர்ட் போன்றவையும் இதில் அடக்கம். இந்த ஸ்மார்ட்போன் 3,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும்.
நோக்கியா 7.2 ஆண்ட்ராய்டு 9 பை கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.
இந்த ஸ்மார்ட்மார்ட்போன் 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி+
டிஸ்ப்ளே, எச்டிஆர் 10 ஆதரவு, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500 நைட்ஸ் ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.