கடந்தவாரம் ரிலையன்ஸ் ஜியோ பிற நெட்வொர்க்குகளுக்கு அவுட்கோயிங் கால் செய்தால் நிமிடத்திற்கு ஆறு பைசா கட்டணம் வசூலிக்க போவதாக அறிவிக்க வாடிக்கையாளர்கள் பலரும் கடுப்பாகிப் போயினர்.
தற்போது வாடிக்கையாளர்களின் கோபத்தைக் குறைக்க அக்டோபர் 9 அல்லது அதற்கு முன்னர் ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிற நெட்வொர்க்குகளுக்கு அவுட்கோயிங் கால் செய்தால் சலுகைகளை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 9 அல்லது அதற்கு முன்னர் ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கு, இந்த சேவையினை தொடர்ந்து வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ கூறியிருந்தாலும் அது, இந்த ஜியோ திட்டத்தின் காலாவதி தேதி வரை மட்டுமே இதனை அனுபவிக்க முடியும்.
காலாவதி ஆனபின்னர், ஜியோ எண்ணிலிருந்து பிற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக அவுட்கோயிங் கால்களை செய்ய முடியாது. அதன்பின்னர் ஏற்கனவே அறிவித்தபடி அவுட்கோயிங் கால் செய்ய டாப்-அப் வவுச்சர்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ரூ. 10 முதல் ரூ. 100 வரை ஜியோ நான்கு ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களை அறிவித்துள்ளது
. TRAI பூஜ்ஜிய முடித்தல் கட்டணம் நடைமுறைக்கு வரும் நேரம் வரை ஆஃப்-நெட் அவுட்கோயிங் அழைப்புகளின் கட்டணம் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது, நிச்சயம் அடுத்த வருடம் முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.