சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் 42,98,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2,93,514 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகின் பல நாடுகளிலும் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளிலும் ஊரடங்கினை ஒவ்வொரு கட்டமாக தளர்த்தும் முடிவினை எடுத்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவில் ஊரடங்கானது படிப்படியாக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் சிங்கப்பூரில் ஊரடங்கானது மே 31 ஆம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் இலவசமாக முகக்கவசங்களை பெறும் வகையில் பிரபல நிறுவனம் வெண்டிங் மெஷினை வைக்க திட்டமிட்டுள்ளது.
அதாவது விளையாட்டு பொருட்களை உருவாக்கும் பிரபல ரேசர் நிறுவனம் முகக்கவசங்களை தயாரித்து வருகிறது, மேலும் இதனை மக்கள் இலவசமாக பெறும் வகையில், அனைத்து இடங்களிலும் முகக்கவசங்களை பெறுவதற்காக வெண்டிங் மெஷினை வைத்துள்ளது.