வாட்ஸ் ஆப்பில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என்று தகவல்கள் பரவி வருகிறது.
அதிலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால் இந்த குறுந்தகவல் முற்றிலும் போலி என பிஐபி எனப்படும் Press Information Bureau சமீபத்தில் அறிவித்தது.
தற்போது அதனையடுத்து, இந்தியாவில் மற்றுமொரு வதந்தி படுவேகமாகப் பரவி வருகின்றது. அதாவது இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டமான மே 3 ஆம் தேதி வரை அனைத்து பயனர்களுக்கும் இலவச இணைய சேவையினை தொலைதொடர்புத் துறை வழங்குவதாக செய்திகள் பரவியது.

மேலும், Work From Home பார்ப்பவர்களுக்காக இது கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை உண்மை என்று நம்பி இதுகுறித்த லிங்க்கில் பல லட்சக்கணக்கிலான பயனர்கள் அப்ளை செய்துள்ளனர்.
ஆனால் இந்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என்றும், Work From Home பார்ப்பவர்களுக்காக எந்தவொரு இலவச இணையத்தையும் தொலைதொடர்புத் துறை வழங்கவில்லை என்றும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.