Information Technology

ஏர்டெலில் ஃப்ரீ எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ்!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸையும், எச்டி எல்இடி டிவியையும் இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தத் திட்டமானது செப்டம்பர் 2019 முதல் இந்தியா முழுவதும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் ஜியோ அதன் ஜிகாஃபைபர் சந்தாதார்களுக்கு ஒரு எச்டி டிவி அல்லது 4 கே எல்இடி டிவி ஒன்றையும், உடன் ஒரு 4கே செட்-டாப் பாக்ஸையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. 

ஏர்டெலில் ஃப்ரீ எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ்!

இதன் மூலம், ஏர்டெல் தனது ஹோம் பிராட்பேண்ட் மற்றும் டி.டி.எச் சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளும்.

முன்னதாக ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கும் மூன்று திட்டங்களின் கீழ், கூடுதல் டேட்டா நன்மையை, அதாவது 1000ஜிபி வரையிலான இலவச டேட்டாவை பெறுவார்கள் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருந்தது. 


இதுபோக ரூ.799/- மதிப்புள்ள Airtel Basic திட்டம், ரூ.1,099/- மதிப்புள்ள Airtel Entertainment திட்டம் மற்றும் ரூ.1,599/- மதிப்புள்ள Airtel Premium திட்டம் மற்றும் ரூ.1,999/- மதிப்புள்ள Airtel VIP திட்டம். இந்த சேவைகளில் கூடுதல் இலவச டேட்டா நன்மையை ஏர்டெல் அறிவித்துள்ளது. 

Related posts

பி.எஸ்.என்.எல்.லுக்கு வந்த புது சோதனை…!!

TechNews Tamil

கட்டண உயர்வால் ஜியோ மீது கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

‘சந்திராயன் 2’ படம்பிடித்த பூமியின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ!

TechNews Tamil