நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு டிசம்பர் முதல் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது பயணிகளின் நேரம் வீணாவதை குறைக்க உதவும்.
இனி ஃபாஸ்டேக் முறைப்படி மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஃபாஸ்டேக் இல்லாமல் பணம் செலுத்த ஒரே ஒரு லேன் இருக்கும்.
ஆனால் இந்த வகையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாமல் செல்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் அவர்கள் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும்.
பிப்ரவரி 29 ஆம் தேதி வரை, ஃபாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகை அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த இலவச ஃபாஸ்டேக்கினைப் பெற வேண்டும் எனில், நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் போன்ற இடங்களில் ஆர்.சியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அரசாங்கம் இல்லாமல் மற்ற தனிநபர் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கிய அட்டைகளுக்கு இந்த சலுகை கிடையாது.