2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் ‘ஃபாஸ்டேக் மூலம் டோல்கேட் வாகனங்களுக்கான டோல்கேட் நுழைவு பணத்தினை வசூலித்து வருகிறது, இந்தத் திட்டத்தினை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது.

இதற்கான ஃபாஸ்ட்டேக்குகளை அரசாங்கம் நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் போன்ற இடங்களில் விற்பனை செய்து வந்தது.
மத்திய அரசு பலமுறை அறிவித்த போதிலும், ஃபாஸ்டேக்கினை வாங்கிப் பயன்படுத்தாமல் வாகன ஓட்டிகள் தாமதப்படுத்தி வந்தனர். அந்த வகையில், ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைபவர்களுக்கு அபராத்ததினை டோல்கேட்டில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி பிப்ரவரி 29 ஆம் தேதி வரை, ஃபாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
மேலும் இந்த பாஸ்ட்டேக்கான கட்டணத்தில் ரூ.100 மத்திய அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது. மத்திய அரசு அறிவித்து இருந்த அந்த இலவச ஃபாஸ்ட்டேக்கினைப் பெற இன்றே கடைசி நாளாகும்.