ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 என்ற மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது.
இதில் ரூ. 219 ப்ரீபெயிட் திட்டத்தினைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். மற்ற நெட்வொர்க்களுக்கு இலவச வாய்ஸ் கால் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வரும்.
மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இதில் ரூ. 399 ப்ரீபெயிட் திட்டத்தினைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். மற்ற நெட்வொர்க்களுக்கு இலவச வாய்ஸ் கால் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வரும்.

மேலும் இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
இதில் ரூ. 449 ப்ரீபெயிட் திட்டத்தினைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். மற்ற நெட்வொர்க்களுக்கு இலவச வாய்ஸ் கால் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வரும்.
மேலும் இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
இதனால் ஏர்டெல் பயனர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியாய் இருக்க, ஜியோ என்ன காத்திருக்கிறது? என்று ஜியோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.