உலகின் மிகப் பெரிய நிறுவனங்களான கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் எங்கு இருக்கிறதோ, அங்கு அந்த நிறுவனத்தின் சார்பில் செலுத்த வேண்டிய வரித் தொகையினை செலுத்த வேண்டும். ஆனால் தற்போது அவை மீது வரி ஏய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைவாக வரி விதிக்கப்பட்ட இடங்களில் வரியினை செலுத்தியும், அதிக வரி வசூலிக்கப்படும் இடங்களில் வரியினைக் கட்டாமல் தவிர்க்கும் முறைகளை செய்கின்றனர்.

அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது என 2 வருடங்களுக்கு முன்பு அதாவது 2016 ஆம் ஆண்டு ஒரு பெரும் பிரச்சினை கிளம்பியது.
அந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையினால், அதன் மீதான விசாரணை தீவிரமாக, வரி ஏய்ப்பு குறித்த விசாரணையானது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, 13 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இதனை ஒப்புக் கொண்டதுடன், வரி ஏய்ப்பு அபராத தொகை ரூ.3 ஆயிரத்து 933 கோடியினையும் மற்றும் வரி பாக்கி தொகை ரூ.3 ஆயிரத்து 659 கோடியினையும் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.