ஃபேஸ்புக்கிற்கு அடுத்த படியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு தளம் வாட்ஸ் அப் ஆகும். இதனைப் பயன்படுத்தாத இளைஞர்களை நம்மால் பார்க்க முடியாது.
ஆனால் சமீபத்தில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன.
தற்போது, வாட்ஸ் ஆப் பயனர்களின் தகவல்கள், போட்டோக்கள் விரைவில் பொதுத்தளத்தில் வெளியாகும் என்றும் அதில் பாதுகாப்பு மீறல்கள் அதிக அளவில் உள்ளது எனவும் டெலிகிராம் ஆப்பின் நிறுவனர் பரேல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெலிகிராம் என்னும் ஆப்பானது ஏறக்குறைய வாட்ஸ் ஆப் போன்றதாகும். வாட்ஸ் ஆப் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப் பட்டாலும், பெரிய அளவில் வரவேற்பினைப் பெறவில்லை.
பாதுகாப்பு மீறல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன் வாட்ஸ் ஆப்பை டெலிட் பண்ணுவதுதான் என்று கூறியுள்ளார்.
இதனால் வாட்ஸ் ஆப் பயனர்கள் பலரும் பீதியில் உள்ளனர்.