ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்ச்சின் பெயர் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஆகும். இந்தியாவில் இது நவம்பர் 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த வாட்ச்சானது ஃபுல் ரவுண்ட் ரீட்-அவுட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக 42 எம்.எம். டையல், ஆல்வேஸ்-ஆன் ரீட் அவுட் டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.
இதன் மூலம் தொலைபேசி அழைப்புகள், SMS, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற அனைத்து வலைதளங்களையும் பயன்படுத்த முடியும்.

இதில் இதய துடிப்பு சென்சா் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ச் பட்டன்களில் மியூசிக், தேதியை பார்ப்பது மற்றும் பல்வேறு இதர அம்சங்களை இயக்கும்படி செட் செய்யது கொள்ளலாம்.
மேலும் இது மியூசிக் கண்ட்ரோல், அலாரம் டைமர், ஸ்டாப் வாட்ச் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
மிகவும் நவீன வசதிகளான அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார்கள் இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
ப்ளூடூத் 4.2 எல்.இ. யினை இணைப்பு ஆதரவாக கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அசரவைக்கும் பல தொழில்நுட்ப வசதியினைக் கொண்டதாக உள்ளது. அதாவது இது இதய துடிப்பு சென்சார், ரேபிட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டதாக வெளிவந்துள்ளது.