பிளிப்கார்ட்: ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!
Games

ஃபோர்ட்நைட்: 22 கோடியே 66 லட்சம் ரூபாய் பரிசு வென்ற சிறுவன்!

அமெரிக்காவை சேர்ந்த “புகா” என்கிற கைல் கியர்ஸ்டோர்ஃப்-தான் (Kyle Giersdorf), ஃபோர்ட்நைட் (Fortnite) கேமில் தனி பிரிவில் முதல் உலக சாம்பியன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த 16 வயது சிறுவன் பெற்ற பரிசுத்தொகை 3 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 22 கோடியே 66 லட்சம் ரூபாய்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த இந்த இளம் கேமர் முதலில் விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் முன்னிலை வகித்தார், முதலிடத்தில் இருந்த இவர் சற்றும் கூட கீழே இறங்கவில்லை.

ஃபோர்ட்நைட்: 22 கோடியே 66 லட்சம் ரூபாய் பரிசு வென்ற சிறுவன்!

இறுதி ஆட்டத்தின் முடிவில் இவர் தனக்கு அடுத்து இருந்தவரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக புள்ளிகளை வைத்திருந்தார்.

யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் பல மில்லியன் டாலர்களை பரிசுத்தொகையாக கொண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆறு ஆட்டங்களிலும், இந்த 16 வயது சிறுவன் தன் நிலையில் சீராகவே இருந்தார்.

இந்த மூன்று நாள் போட்டிகளில், எபிக் கேம்ஸ் 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 200 கோடி) பரிசுத் தொகையை வழங்கியுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 50,000 டாலர்கள் (சுமார் 34.5 லட்சம் ரூபாய்) உறுதியான பரிசுத் தொகையை வழங்கியிருந்தது.

முன்னதாக சனிக்கிழமையன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவுப் போட்டியில் “நைஹ்ராக்ஸ்” மற்றும் “அக்வா” என்ற புனைப்பெயர்களைப் கொண்ட கேமர்கள் அந்த பிரிகில் முதல் ஃபோர்ட்நைட் உலக சாம்பியனானர்கள், இவர்களுக்கு தலா 1.5 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியின் போது, ​​புகா மற்றுமின்றி இன்னும் மூன்று வீரர்களும் மில்லியனர்களாக மாறினர்: “சால்ம்” (Psalm) (1.8 மில்லியன் டாலர்கள்), “எபிக்வேல்” (Epikwhale) (1.2 மில்லியன் டாலர்கள்) மற்றும் கிரியோ (Kreo) (1.05 மில்லியன் டாலர்கள்) என்ற பரிசுத்தொகையை வென்றனர்.

Related posts

இந்திய விமானப்படை வெளியிடவுள்ள IAF மொபைல் கேம்!

TechNews Tamil

கேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

TechNews Tamil