Mobile

அறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold !!

சாம்சங் நிறுவனத்தின் அல்லது மடிக்கக்கூடிய Samsung Galaxy Fold ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5 ஆம் தேதி தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் அளவிலான Infinity Flex Display டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதனை ஒரு Clamshell போல உள்நோக்கி மூடி மடிக்கலாம்.

மேலும் 4.2: 3 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டைனமிக் AMOLED டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.

அறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold !!

இதில் இரண்டாம் நிலை டிஸ்பிளே ஒன்றும் உள்ளது. அது 4.6 இன்ச் அளவிலான எச்டி+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே ஆகும்.

மேலும்  10 எம்பி அளவிலான செல்பி கேமராவும் உள்ளது, மேலும் டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் 10 எம்பி + 8 எம்பி அளவிலான இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பும் உள்ளது.

இந்த கேலக்ஸி ஃபோல்ட் ஆனது 12 ஜிபி ரேம் + 512 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4,380mAh பேட்டரி கொண்டுள்ளது.


கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் தோராயமான விலை ரூ.1,40,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் புதிய மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

TechNews Tamil

15 வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்குகிறது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil