Information Technology

சிங்கப்பூரில் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்!!

ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் என்றாலே அதற்குத் தனி மவுசுதான். அந்த மொபைல் போலவே அதற்கான பாலிசிகளும் இருக்கும். ஆப்பிள் ஐபோனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும்.

அத்தகைய ஆப்பிள் ஐபோனின் ஸ்டோரை அனைவரும் அதிசயிக்கும் வகையில் தண்ணீரில் மிதக்கும் வகையில் அமைத்துள்ளனர். அதாவது இந்த தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பிள் ஸ்டோருக்கு மட்டும் வித்தியாசமாக மெரினா பே சாண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ஆப்பிள் மற்ற ஸ்டோர்களைப் போல் அல்லாமல் உருளை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்!!

மேலும் உருளையின் மேற்புரமானது கண்ணாடியால் ஆக்கப்பட்டுள்ளது, சிங்கப்பூரில் ஏற்கனவே இரண்டு ஆப்பிள் ஸ்டோர் உள்ளநிலையில் இந்த நிலையம் மூன்றாவதாகத் திறக்கப்பட்டுள்ளது.

நீல வண்ண நீரின் மேல் பளிச்சென்று ஒரு உருளை வடிவில் உள்ள இந்த ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ்  ஸ்டோர் ஆனது தூரத்தில் இருந்து பார்க்க நிலா போல் உள்ளதாக உள்ளூர் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்டோரில் 23 மொழிகளில் பேசும் திறன் கொண்ட சுமார் 150 ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜியோ அறிமுகப்படுத்திய 98 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம்!!

TechNews Tamil

சந்திராயன் 2 : ஒரு புறமாக சாய்ந்துள்ள விக்ரம் லேண்டர்!!

TechNews Tamil

ரூ.8004 கோடி நிலுவைத் தொகையினை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்!!

TechNews Tamil