பிளிப்கார்ட்டில், ஒவ்வொரு மாதம் தொடக்கத்திலும் ‘FlipStart
Days’ என்ற பெயரில் சிறப்பு
விற்பனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தற்போது ஆகஸ்ட் மாத தொடக்கத்தை கோலகலமாக்கும் வகையில், பிளிப்கார்ட்டில் பிளிப்ஸ்டார்ட் டே ‘Flipstart
Day’ ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர் ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இதில் லேப்டாப், டிவி, ஸ்மார்ட்போன், ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்ச், ட்ரிம்மர், கணினி உதரி பாகங்கள் என எண்ணற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
ஆஃபர் விலையில் விற்கப்படுகிறது.

இவற்றில் குறிப்பிட்டுச்
சொல்லும்படியாக 12,990 ரூபாயிலிருந்து லேப்டாப் வழங்கப்படுகிறது. ஹெட்போன்களுக்கு
70 சதவீதம்
வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹேர் டிரையர், மேக்கப் பொருட்கள் 249 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 1000
mAh சக்தி கொண்ட பவர் பேங்க் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக
டிஜிட்டல் கேமரா, லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுக்கு சிறப்பான ஆஃபர் உள்ளது. சாதாரண
டிஜிட்டல் கேமரா 3,499 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. புகைப்பட பிரியர்கள் புதிதாக
கேமரா வாங்க வேண்டுமென்றால், பிளிப்கார்ட்டில் ஒரு முறை பார்த்து பட்ஜெட் விலையை
நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதே போல், USB கேபிள், மொபைல் பாப் ஹோல்டர், டெம்பர் கிளாஸ், மெமரி கார்டு, மொபைல் போன் எக்ஸ்ட்ரா லென்ஸ் போன்ற
கேட்ஜெட்ஸ்களும் குறைந்த விலையில் கிடைக்கிறது. மொபைல் கேமராவில் கூடுதலாக லென்ஸ்
பொருத்தி படம் பிடிக்க நினைப்பவர்கள், இதில் வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை வெறும் 199 ரூபாய் ஆகும். இதே போல், வெளிக்கடைகளில் 100 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் மொபைல் கேபிள்கள், பிளிப்கார்ட்டில் 79 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
மேலும், இசை பிரியர்களுக்காக ஹெட்போன், ஸ்பீக்கர் ஆகியவற்றுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சோனி, போட், ஜேபிஎல் போன்ற பிரபல நிறுவனங்களின் ப்ளூடூத்
ஹெட்போன்களுக்கு 30 முதல் 60 சதவீதம் வரையில் தள்ளுபடி உண்டு.