பிளிப்கார்ட்டில் ‘நேஷனல் ஷாப்பிங் டே’ என்ற பெயரில் எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் வரும் 8ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு பெரிய ஆஃபர் உள்ளது என்பதை இங்கு காணலாம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசானில் பல்வேறு சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, அதற்கு இணையாக பிளிப்கார்ட்டிலும், தற்போது புதிதாக ‘நேஷனல் ஷாப்பிங் டே’ (National Shopping Day) என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபர் வரும் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிளிப்கார்ட் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது 7ம் தேதி இரவு 8 மணி முதல் ஆஃபர் தொடங்குகிறது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு 8ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
இதில் டிவி, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக LED ஸ்மார்ட் டிவி வெறும் 6,999 ரூபாயில் இருந்து விற்கப்படுகிறது. அயன் பாக்ஸ் 299 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.
இதே போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையில் ஆஃபர்கள் உள்ளது. இதிலும் எந்த
தயாரிப்புகளுக்கு எவ்வளவு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை சர்ப்ரைஸாக
வைத்துள்ளார்கள். ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படியாக பிரபல ட்ரிம்மர்கள் 549 ரூபாயில் இருந்தும், பவர் பேங்க் வெறும் 999 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது.
பிளப்கார்ட் நேஷனல் ஷாப்பிங்
டே விற்பனையில், இன்னும் பல கொசுறு ஆஃபர்களும் உள்ளது. 3 வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி, 4 வாங்கினால் 15 சதவீதம் தள்ளுபடி, டிராவல்ஸ்க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி ஆகியவை
வழங்கப்படுகிறது. எனவே, புதிதாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க
விரும்புகிறவர்கள், இரண்டே நாள் மட்டும் பொறுத்திருந்து, பிளிப்கார்ட்டில் ஒரு ரெய்டு விடலாம்.