இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேசன்களில் முக்கியமான இடத்தை ஃப்ளிப்கார்ட் வகித்து வருகிறது. சலுகைகளை வழங்கி அமேசானுடன் போட்டி போட்டுக் கொண்டே தன்னை முன்னிறுத்தக் கூடியது.
ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என்ற வசதிமூலம் இலவச டெலிவரி, உடனடி டெலிவரி போன்றவற்றை ஃப்ளிப்கார்ட் வழங்கினாலும் அமேசான் போன்று அனைத்து சலுகைகளும் அனைத்துப் பொருட்களுக்கும் கிடைப்பது இல்லை. இதனால் இந்தியாவில் அதிகம் உபயோகிக்கப்படும் ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேசன்களில் ஃப்ளிப்கார்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பண்டிகைகளின் போது ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்காக சலுகைகள் வழங்கும்.

சொந்தமாக இணைய தொடர், திரைப்படங்களை வாங்கி வெளியிடும் திட்டம் ஃப்ளிப்கார்ட்டிடம் இல்லை. ஏற்கனவே இருக்கும் டிஸ்னி கார்ட்டூன்கள், திரைப்படங்கள், காமெடி தொடர்கள் ஆகியவற்றை தனது சேவையில் இணைத்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்த விடியோக்களை பார்க்கும்போது இடையே ஆஃப்ர்களை காட்டும் விளம்பரங்கள் போன்றவையும் வெளியாகும். மேலும் ஃப்ளிப்கார்ட் ப்ளஸில் இணைவது மூலம் மின்காசுகள் கிடைக்கும். வீடியோ பார்க்கும்போது இது அதிகரிக்கும். அதை வைத்து ஃப்ளிப்கார்ட் தளத்தில் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.