Apps

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த மாதத்திற்கான மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையை அறிவித்துள்ளது . இன்று ஆரம்பமான பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையானது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் இந்த விற்பனையில், சியோமியின் Redmi 6 ஸ்மார்ட்போன் (3GB, 64GB) 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதனுடன் Honor 8C ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் 7,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

பிளிப்கார்ட்டின் மன்த்-எண்ட் மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில் Realme 2 Pro ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இதனுடன் Samsung Galaxy A50 ஸ்மார்ட்போனிற்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியிலிருந்து கூடுதலாக 2,000 ரூபாய் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாரம் நடைபெறும் பிளிப்கார்ட்  மொபைல்ஸ் பெஸ்ட் விற்பனையில் Oppo A5 (4GB, 64GB) ஸ்மார்ட்போன், 9,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது.

மோட்டோரோலா ஒன்விஷன் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்சிற்கு கூடுதலாக 2,000 ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது.

Asus 5Z  ஸ்மார்ட்போன் 23,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. Asus Max M2 ஸ்மார்ட்போன் 7,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையாக உள்ளது.

ஹானர் போன்களில், Honor 10 Lite ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், Honor Play ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

Samsung Galaxy S10 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்கவுள்ளது.

Related posts

கண்காணிப்பு வசதிகளுடன் சிறுவர்களுக்கான மெசஞ்சர் ஆப் அறிமுகம்!!

TechNews Tamil

உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை காட்டும் கூகுள் மேப்ஸ்!!

TechNews Tamil

ட்விட்டரில் ரீட்விட் செய்யும் போது கருத்துகளை பதிவிடலாம்!!

TechNews Tamil