ரெட்மி கே 20 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஃப்ளிப்கார்ட் தீபாவளி சேலில் ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு, தீபாவளி சேலின் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஆரம்பமாகிறது.
தீபாவளி சேலின் போது ரெட்மி கே 20 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 எஸ்க்கு ரூ.4,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ரெட்மி கே 20 ப்ரோவுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி செய்யப்படவுள்ளது.
இந்த சேலில், ரெட்மி கே 20 ப்ரோவின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகை ரூ .23,499 க்கு விற்பனை ஆகவுள்ளது.
மறுகையில் உள்ள இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.26,499 க்கு வாங்க கிடைக்கும். கே 20 ப்ரோவின் உண்மையான விலை நிர்ணயத்தை பொறுத்தவரை: அடிப்படை மாடல் (6 ஜிபி / 128 ஜிபி) ரூ.27,999 க்கு விற்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் மாடல் ஆனது ரூ.30,999 க்கு விற்கப்படுகிறது.
மேலும் ரெட்மி நோட் 7 எஸ் இனி ரூ.8,999 க்கு கிடைக்கும். எச்.டி.எஃப்.சி வங்கி சலுகையாக ரூ.1500 ம் கிடைக்கும். மொத்தத்தில் ரெட்மி நோட் 7 எஸ் ரூ.7,499 க்கு விற்பனையாகும்.
மேலும், ரெட்மி நோட் 7 எஸ் இந்தியாவில் ரூ.9,999 என்கிற ஆரம்ப விலைக்கு விற்பனையாகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்ட ரெட்மி நோட் 7 எஸ் ஸ்மார்ட்போன் ரூ .11,999 க்கு விற்பனை ஆகவுள்ளது.