Apps

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தியாவில் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை ஜூலை 15-ல் துவங்கி, ஜூலை 18 வரை நடைபெறும். இந்த விற்பனையில், எஸ்.பி.ஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட், எஸ்.பி.ஐ கிரடிட் கார்டுகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது.

டிவி சாதனங்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி, உடைகள், காலனிகள் போன்ற ஃபேஷன் சாதனங்களுக்கு 80 சதவிகிதம் வரை என அதிரடிக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக 'ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் 7,499 ரூபாய் என்ற விலையிலிருந்து துவங்குகிறது. அதே நேரம் நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் விற்பனையாகவுள்ளது. போகோ F1, இன்பினிக்ஸ் நோட் 5 மற்றும் விவோ V9 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 

விவோ V11, விவோ V11 Pro மற்றும் ஓப்போ F11 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு 2,000 ரூபாய் எக்ஸ்செஞ்ச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் லெனோவா மற்றும் அல்கடெல் டேப்லெட்கள் 6,999 ரூபாய் என்ற விலையிலிருந்தே துவங்குகிறது. மேலும், இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ள சாம்சங் கேலக்சி டேப் A 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Related posts

மீண்டும் துவங்கும் அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

TechNews Tamil

வாட்ஸ் ஆப் போல் ட்விட்டரில் அனைவரும் எதிர்பார்த்த ஸ்டோரி வசதி!!

TechNews Tamil

வாட்ஸ்அப் செயலியில் சோதனையில் உள்ள அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம்!!

TechNews Tamil