Apps

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள்: ரூ.20,000 தள்ளுபடியினைப் பெற்றுள்ள கேமிங்க் ஸ்மார்ட்போன்!!

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அதிரடி தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளது. பிக் ஷாப்பிங் நாட்கள் என்ற இந்த விற்பனையானது, மார்ச் 19 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பிளிப் கார்ட் விற்பனையில் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் போன்றவற்றிற்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.. எலெக்ட்ரானிக் பொருட்கள் சிலவற்றிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் இந்த பிளிப்கார்ட் விற்பனையானது முடியவுள்ள நிலையில், ரூ.20,000 தள்ளுபடியில் பிளாக்ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விற்பனையில் உள்ளது என்ற தகவல்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள்: ரூ.20,000 தள்ளுபடியினைப் பெற்றுள்ள கேமிங்க் ஸ்மார்ட்போன்!!

இந்த பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரூ, 20,000 தள்ளுபடியுடன் விற்பனைக்குக் கிடைப்பது சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

1.     பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மெமரி வகையின் இந்திய விலை- ரூ.39,999 (பழைய விலை)

2.     பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மெமரி வகையின் இந்திய விலை- ரூ.19,999 (புதிய விலை)

மேலும் இத்துடன் கூடுதலாக எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீதம் கேஷ்பேக் போன்றவையும் வழங்கப்படுகிறது.

Related posts

அமேசானின் 5 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கான விற்பனை ஆரம்பம்!!

TechNews Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி ஆப் நீக்கம்!

TechNews Tamil

இனி பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது- பிளிப்கார்ட்டின் அதிரடி!

TechNews Tamil