இந்த மாதம் நடைபெற உள்ள ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 இல் அதிக அளவிலான தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விற்பனை, செப்.29 முதல் தொடங்கி அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மற்ற பொருட்களுடன் கூடுதலாக, போன்களுக்கு அதிக அளவிலான ஆஃபர்கள் அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட்.

இந்த சேலில், அதிக அளவிலான போன்கள் இடம்பெறும் என்பதால், எந்த போன்கள் இடம்பெறும் என பயனர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அந்த வகையில் சாம்சங் S9+, ரியல்மி 3 ப்ரோ, மோட்டோரோலா ஒன் விஷன், ரெட்மி நோட் 7s போன்ற போன்கள் அந்த தள்ளிபடி பட்டியலில் இடம்பெற்றிருப்பது உறுதியாகிறது. மொபைல் விற்பனை செப்.30ல் தொடங்குகிறது.
தள்ளுபடியில், மோட்டோரோலா ஒன் விஷன் போனின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி நோட் 7s ரூ.10,119 அடங்கும்.
ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.