ஃப்ளிப்கார்ட் Flipkart TV Days என்னும் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 வரை இருக்கும் என்று ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
என்ன மாதிரியான பொருட்களுக்கு சலுகைகள் என்று குழம்ப வேண்டியதில்லை, காரணம் இது டிவிக்காக மட்டுமே அறிவிக்கப்பட்ட பிரத்தியேக சேல் ஆகும்.
புதிதாக அறிமுகமான பல டிவிக்கள் சிறப்பான தள்ளுபடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.

மேலும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபராக, ரூ.22,000 வரையில் தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது. மேலும் கூடுதலாக ஃப்ளிப்கார்ட் கார்டுமூலம் வாங்கினாய் 10 சதவிகித தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், கட்டணமில்லா ஈ.எம்.ஐ வசதியும் ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது.
மேலும் 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 49 இன்ச் அளவிலான Mi TV 4A Pro டிவிக்கள் ரூ.12,499, ரூ.21,999 மற்றும் ரூ.29,999 க்கு ஆகிய விலைக்கு கிடைக்கும். சியோமியின் 55 இன்ச் Mi TV 4X Pro ரூ.39,999 க்கு கிடைக்கும்.
மேலும், சாம்சங்க் 32 இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.17,999 க்கும், அதன் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கள் ரூ.37,999 மற்றும் ரூ.55,999 க்கும் விற்கப்படும்.
தாம்சன் 32 இன்ச் டிவி ரூ.10,499 க்கு விற்கப்படும். வு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.10,999 க்கும். தாம்சன் 40 இன்ச், 49 இன்ச் மற்றும் 65 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கள் ரூ.19,999, ரூ.33,999 மற்றும் ரூ.59,999 க்கு கிடைக்கும்.
வி 50 இஞ்ச் பிக்சலைட், 50 இன்ச் பிரீமியம் மற்றும் 55 இன்ச் பிரீமியம் ஆண்ட்ராய்டு டி.விக்கள் ரூ.27,999, ரூ.35,999 மற்றும் ரூ.39,999 க்கு கிடைக்கும்.