Apps

பிளிப் கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019: விழாவாக கொண்டாடும் பிளிப் கார்ட்!!

Flipkart நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பிளிப் கார்ட் டிவி சேலினை அறிமுகப்படுத்தியது, மிக அமோக வரவேற்பினைப் பெற்ற இந்த சேலினைத் தொடர்ந்து, பிளிப் கார்ட் அடுத்த சேலினை ஆரம்பிக்கவுள்ளது.

அதாவது பிளிப் கார்ட் 2019ஆம் ஆண்டிற்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது.

இந்த சேல் செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 4 வரை நடைபெறும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளிப் கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019: விழாவாக கொண்டாடும் பிளிப் கார்ட்!!

இந்த சேலில் விளம்பரதாரர்களாக வழக்கத்தினைவிட பிரமாண்டமாக, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஆலியா பட், விராட் கோஹ்லி, எம்.எஸ்.தோனி, புனேத் ராஜ்குமார், துல்கர் சல்மான், மகேஷ் பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிபிட்ட ரீதியான பொருட்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடையாது, மொபைல்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், டிவிக்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என போன்றவற்றின் சிறப்பு சலுகை சேல் செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளதி.

ஆக்சிஸ் வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட்டினை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மற்றும் அனைத்து வகையான சேலுக்கும் 5 சதவிகிதம் கேஷ்-பேக் சலுகைகள் வழங்கப்படும் என்றும், இதனுடன் 100 கோடி ரூபாய் வரை செலவிட்டு பிளிப்கார்ட் விளையாட்டுகள் மற்றும் போட்டிகளை நடத்தவுள்ளது. 

Related posts

2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil

விரைவில் விலை ஏறும் ஜியோவின் ரீசார்ஜ் கட்டணங்கள்!!

TechNews Tamil

அறிமுகமாகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.498/- மதிப்பிலான ஸ்டார் மெம்பர்ஷிப்!

TechNews Tamil