Gadgets

ஹானர் அறிமுகப்படுத்தியுள்ள ஃபிட்னஸ் பேண்ட்!

ஹானர் ஸ்மார்ட் பேண்டு ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் பெயர் ஹானர் பேண்ட் 5 ஆகும்.

இந்த பேண்டின் பயன்தான் என்ன? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பேண்ட் மூலம்  உடல்நிலை கண்காணிப்பு மற்றும் அளவீட்டு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஃபிட்னஸ் பேண்ட் 2,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் வழியாக இன்று முதல் இந்த பேண்டின் விற்பனை தொடங்கியுள்ளது.

ஹானர் அறிமுகப்படுத்தியுள்ள  ஃபிட்னஸ் பேண்ட்!

ஹானர் பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்டை உங்கள் ஸ்மார்ட்போனில் புளூடூத் வழியாக ஹவாய் ஹெல்த் செயலி மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

பல உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை வழங்குவதைத் தவிர, ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க அல்லது முடக்குவதற்கான திறனுடன் ஸ்மார்ட் பேண்ட் உங்கள் ஸ்மார்ட்போனின் தகவல்களை காட்சி திரையில் நிகழ்நேரத்தில் காண்பிக்கும். கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிப்பதற்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஹானர் பேண்ட் 5 ஏழு புதுமையான நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேண்ட் முழு வண்ண AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த பேண்ட்டில் ஸ்டைலான வாட்ச் அமைந்துள்ளது.

ட்ரூசீன் 3.0 ஹார்ட் ரேட் மானிட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரவில் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது.

Related posts

ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டமைப்பில் அறிமுகமானது 43 இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

ரூ.40,900 முதல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5!!

TechNews Tamil

எல்ஜி மொபைலுக்கு 24 இன்ச் எல்இடி டிவி இலவசம்!!

TechNews Tamil