ஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் "வெர்சா" வெளியீடு…
Gadgets

ஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் “வெர்சா” வெளியீடு…

ஃபிட்பிட் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் வெர்சா என்ற இரண்டாவது மாடலை வெளியிட்டுள்ளது. வாட்ச்சிலேயே பணம் செலுத்தும் வசதி கொண்டதாக இருக்கும் வெர்சா உருவாக, சமீபத்தில் ஃபிட்பிட் நிறுவனம் வாங்கிய பெப்பல் மற்றும் காயின் ஆகிய நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

இதற்கு முந்தைய மாடலான ஐயோனிக்கோடு ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டே மாற்றங்கள் தான் உள்ளது. வெர்சாவில் ஜி.பி.எஸ் வசதி மற்றும் எ.எஃப்.சி சிப் வசதி இல்லை. ஆனால், இந்தியாவில் வெளியாக இருக்கும் வெர்சா மாடலில், ‘ஃபிட்பிட் பே’ மூலம் பணம் செலுத்த முடியும்.

ஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் "வெர்சா" வெளியீடு…

மற்ற அம்சங்கள் அனைத்தும், ஐயோனிக் மாடல் போலவே இருக்கிறது. 50 மீட்டர் ஆழம் வரை வட்டர் ப்ரூஃப் உள்ளது. கலர் ஸ்கிரீன் மற்றும் இதயத் துடிப்பை பதிவு செய்துக் கொண்டே இருக்கும், இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி 4 முதல் ஒரு வாரம் வரை தாங்கக் கூடும்.

விலையை பொருத்தவரையில் பெரிய வித்தியாசம் இல்லை. 20 ஆயிரம் ரூபாய்க்கு வெர்சா விற்பனைக்கு வருகிறது. ஆனால், முந்தைய மாடலான ஐயோனிக் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனது போட்டியாளர்களான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 மற்றும் சாம்சங் கீர் ஸ்போர்ட் ஆகிய ஸ்மார்ட்வாட்ச்கள் காட்டிலும், வெர்சாவின் விலை குறைவே.

வெர்சாவின் வடிவமைப்பைப் பொருத்தவர ஆப்பிள் வாட்ச்சின் வடிவமைப்பை ஒத்து இருக்கிறது. சதுர வடிவிலான அதன் டிஸ்பிளே 1.34இன்ச் எல்.சி.டி திரையும் 317 பிக்சலும் கொண்டது. ஆப்பிள் மற்றும் ஃபிட்பிட் ஐயோனிக்கை விட இது அளவில் சிறியதாகும்.

வெர்சாவின் ஸ்ட்ராப் எளிமையான டிசைன் கொண்டதாக இருக்கிறது. 22 மில்லி மீட்டர் ஸ்ட்ராப்புகள் வரை பயன்படுத்தலாம். 

 வாட்ஸாப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், மெசஞ்செர் என ஆண்ட்ராய்டோடு இணைத்து பயன்படுத்தலாம். அவற்றில் ரிப்ளைகளை எளிதாக தரும் வகையில் எமோஜிக்கலும், குறுந்தகவல் டெம்பிளேட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Related posts

மலேசியாவில் இன்ஃபினிக்ஸ் X1 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய மீடியாபேட் எம்5 லைட் சாதனம்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது 98 இன்ச் ரெட்மி டிவி!

TechNews Tamil