இந்திய அளவில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் சேவை ரயில்வே ஆகும். இதனை அரசாங்கமே ஏற்று நடத்தி வந்தது.
முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
இதன் சேவைகள் தனியார் ரயில் சேவை என்பதையும் தாண்டி விமானத்தின் அளவான சேவையாக உள்ளது.

தேஜாஸ் நிறுவனம், இந்தியாவில் புதிய தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை துவங்கியுள்ளது.
இந்த ரயில் சேவையானது முதல் முறையாக டெல்லி மற்றும் லக்னோ இடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிக அளவில் வரவேற்பினைப் பெற்ற அம்சம் பணிப் பெண்களின் சேவை இருப்பதுதான். அதாவது ஆர்டர் செய்யும் உணவு மற்றும் தேவையான உதவிகளை இவர்கள் செய்வார்கள்.
ரயில் தாமதமானால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வழங்கப்படும்.
லக்கேஜ்களை இடத்திற்கே நேரடியாக வந்து பிக்-அப் செய்துகொள்ளவும், லக்கேஜ்ஜை டோர் டெலிவரி செய்யவும் செய்கிறது.
ரயில் பேட்டிகளில் காபி மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளது.
ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயங்கும், மேலும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை ஆகும். டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலமே வாங்க முடியும்.