இந்தியாவில் சியோமி நிறுவனம் தொடங்கி ஐந்தாவது ஆண்டு விழா கோலகலமாக நடந்து வருகிறது. இதனால் எம்ஐ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நாளையோடு நிறைவு பெறுகிறது. வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான், எம்ஐ ஆன்லைன் ஷாப்பிங்கில் இதனை பெற்றுக் கொள்ளலாம்.
இதில் 7,500 ரூபாய் வரையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் விற்பனையில் 3,300 வரையில் கூடுதல் ஆஃபர், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி 7, ரெட்மி நோட் 7S, ரெட்மி 6A, ரெட்மி Y3, எம்ஐ A2, ரெட்மி 6 ப்ரோ என மக்களிடம் பெரும்
வரவேற்ப்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் ஆரம்ப விலையாக ரெட்மி 6A போனுக்கு ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 5,999
ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 32 இஞ்ச் LED டிவிக்கு 2,500
ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய விலை 12,499 ரூபாய் ஆகும். 999 ரூபாய் மதிப்புள்ள இயர் போன்
599 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 1,799 ரூபாய் மதிப்புள்ள எம்ஐ
பேண்ட் 999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.