Apps

கொரோனா வைரஸ் குறித்த தகவலை வெளியிட மத்திய அரசின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 2,74,643 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 11,366 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.

சீனாவைத் தாண்டி இத்தாலி, பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஹலோ ஆப் போன்ற மிக முக்கிய தளங்களில் அதிக அளவில் வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த தகவலை வெளியிட மத்திய அரசின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்

இதனால் மக்கள் அதிக அளவில் பீதியாகி உள்ளனர், மக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் குறித்த போலியான செய்திகளை நீக்கக்கோரி, இணைய தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா குறித்த உண்மை நிலவரங்களைப் பதிவிடும் பொருட்டு மத்திய அரசு வாட்ஸ்அப் செயலியில் அக்கவுண்ட் ஒன்றை துவக்கியுள்ளது. இந்த அக்கவுண்ட்டிற்கு MyGov Corona Helpdesk என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் மக்கள் 9013151515 என்ற மொபைலில் சேமித்துக் கொள்ள வேண்டும், அடுத்து MyGov Corona Helpdesk க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

இது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை வழங்கும்.

Related posts

ஏர்டெலில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சலுகை!!

TechNews Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி ஆப் நீக்கம்!

TechNews Tamil

இந்தியாவில் டிரோன் டெலிவரி சோதனையில் ஜொமாட்டோ, ஸ்விக்கி!!

TechNews Tamil