விவோ நிறுவனம் புது மாடல் மொபைல்களை வெளியிட்டு அதனுடைய இடத்தினை தக்கவைத்துள்ளது.
தற்போது இதுகுறித்த டீசர் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் திளைக்க வைக்கிறது, Vivo Z1x ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ள இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாரை ப்ளாஷ் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் என குறிப்பிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.

இந்த Vivo Z1x ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியுடன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையுடன் 6.38-இன்ச் அளவிலான திரையை கொண்டுள்ளது.
மேலும் அந்த பக்கம் இந்த Vivo Z1x ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னேப்டிராகன் ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது.
Vivo Z1x ஸ்மார்ட்போன், இந்தியாவில் செப்டம்பர் 6 அன்று அறிமுகமாகவுள்ளது. மேலும், விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் தான் அறிமுகமாகும் என்ற தகவல்களும்கூட, வெளியாகியுள்ளது.