Mobile

ரெட்மி நோட் 8 Pro இன் சிறப்பம்சங்கள்!

சியோமி நிறுவனம், இந்த Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸர், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4,500mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.53-இன்ச் திரையை கொண்டுள்ளது. Note 7 Pro போலவே இந்த ஸ்மார்ட்போனும், வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 8 Pro இன் சிறப்பம்சங்கள்!

6GB மற்றும் 8GB என்ற அளவிலான RAM வகைகளுடன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. சேமிப்பில் 64GB மற்றும் 128GB என இரண்டு அளவுகளை கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.

முன்னதாக சியோமி நிறுவனம் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 

Related posts

வியக்க வைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

TechNews Tamil

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil