Mobile

அறிமுகமான சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ இன் அம்சங்கள்!

சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் நேற்று அறிமுகமாகியுள்ளது. கடந்த மாதம் நியூயார்க்கில் அறிமுகம் செய்யப்பட்டபோதே இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவையும் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் துவங்கியது.

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட கேலக்சி நோட் 10, ஆண்ட்ராய்ட் 9.0 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.3-இன்ச் FHD+ (1080×2280 பிக்சல்கள்), இன்பினிட்டி-ஓ திரை, HDR10+ வசதி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9825 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 

அறிமுகமான சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ இன் அம்சங்கள்!

மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 12 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் (77 டிகிரிகள்) கேமரா. 16 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா- வைட் ஆங்கிள் (123 டிகிரிகள்) கேமரா. 12 மெகாபிக்சல் அளவிலான தொலைதூர புகைப்பட லென்ஸ் கேமரா. முன்புறத்தில் ஹோல்-பன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 10 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது.

3,500mAh அளவிலான் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 25W சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறப்பம்சங்களிலும் இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்றுபட்டுள்ள கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் QHD+ (1440×3040 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ திரையை கொண்டுள்ளது.

பேட்டரி அளவில் மட்டும் மாறுதலைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 45W சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வந்தது Redmi Note 6 Pro இல் MIUI 11 அப்டேட்!

TechNews Tamil

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ரெட்மி கே30 ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil