Information Technology

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சங்கள்!

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இப்போது பார்க்கலாம். ரெட்மி நோட் 8 ப்ரோவைப் போலவே இந்த ஸ்மார்ட்போனும் நான்கு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாக்செல் முதன்மை கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும்.

ரெட்மி நோட் 8 நான்கு பின்புற கேமரா அமைப்பு மற்றும் கேமராக்களுக்கு அருகில் இருக்கும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றுடன் அறிமுகமாகும் என்று சியோமியின் ரெட்மி தெரிவித்துள்ளது.

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சங்கள்!

இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், ஒரு சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா சென்சார், டெப்த் கேமரா சென்சார் மற்றும் ஒரு சூப்பர் மேக்ரோ லென்ஸ் ஆகியவையும் உள்ளதாகத் தெரிகிறது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU-யுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், ஹெக்ஸாகன் 686 டி.எஸ்.பி உடன் மூன்றாம் தலைமுறை AIE செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மற்றும் ஹெக்ஸாகன் வெக்டர் நீட்டிப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் என்பதும் தெளிவாகியுள்ளது.

ரெட்மி நோட் 8 சீரிஸ் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. ரெட்மி நோட் 8 Pro ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பின்புற முதன்மை கேமரா சென்சார், ஹீலியோ G90T ப்ராசஸர் மற்றும் 4,500mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

29.1 மில்லியன் ரெஸ்யூம்களை திருடிய செர்பரஸ் வைரஸ்!!

TechNews Tamil

ஏர்டெல் வழங்கும் இலவச லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி!

TechNews Tamil

ஜியோவுக்கு போட்டியாக வெளியான ஏர்டெல் பிளான்கள்.!

TechNews Tamil