Mobile

ரியல்மீ XT இன் சிறப்பம்சங்கள் !!!

Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. 4GB + 64GB, 6GB + 64GB, மற்றும் 8GB + 128GB என்று மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்டர்-ட்ராப் நாட்ச் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

மேலும் 4,000mAh பேட்டரி,  20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ரியல்மீ XT இன் சிறப்பம்சங்கள் !!!

இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Related posts

2000 ரூபாய் விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஹானர் 20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் சியோமியின் மி சிசி9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil