Mobile

லெனோவொ டேப் V7ன் சிறப்பு அம்சங்கள்!!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்  நிகழ்வின் போது Lenovo நிறுவனம் அதன் Lenovo Tab V7-ஐ முதன்முதலாக அறிவித்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்த டேப்ளெட் ரூ.12,990/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. 


Lenovo Tab V7 ஆனது 6.9 இன்ச் அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1080 x 2160 மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான முழு எச்டி+ தெளிவுத்திறனை வழங்குகிறது. மேல் மற்றும் கீழ் பகுகிகளில் சமச்சீரான பெஸல்களை கொண்டிருப்பதால், இந்த டாப்ளெட் 81 சதவீத Screen space-ஐ உங்களுக்கு வழங்கும். 

லெனோவொ டேப் V7ன் சிறப்பு அம்சங்கள்!!


4GB அளவிலான RAM மற்றும் Snapdrogan 450 ப்ராசஸர் கொண்டு இயங்கும் Lenovo Tab V7-ன் அதிகபட்ச சேமிப்புத்திறன் ஆனது 64GB ஆகும். கூடுதல் சேமிப்பகத்திற்காக, Micro SD கார்டு ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது. 



பின்புறத்தில் 13MP அளவிலான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 5MP கேமராவை கொண்டுள்ளது. இந்த டாப்ளெட் ஆனது Night Shot, Panorama and HDR போன்ற சில பிரதான கேமரா அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. சமீபத்திய Android 9 Pie OS கொண்டு இயங்குகிறது. 


பின்புற பேனலில் Fingerprint Scanner-ஐ கொண்டிருக்கும் Lenovo Tab V7 ஆனது டால்பி ஆடியோவுடன் இயங்கும் இரண்டு முன்பக்க ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது 5180mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியைக் கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

இதில் Fast Charging ஆதரவு இல்லை, Dual SIM ஆதரவு இடம்பெற்றுள்ளது. இதர இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, GPS, USB-C and 3.5mm ஆடியோ ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது. 


Related posts

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிளிப்கார்ட்: ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil

1000 தள்ளுபடி விலையுடன் விற்பனையினைத் துவக்கியுள்ள ஹானர் 9எக்ஸ் !!

TechNews Tamil