Mobile

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

கூகுள் பிக்சல் 4 சீரியசில் கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் என்கிற இரண்டு வகைகளில், வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி அன்று அறிமுகமாகவுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களில் Pixel Neural Core நிச்சயம் இருக்கும். மேலும் இதில் Pixel Visual Core யினை விட மேம்பட்டதாக இருக்கக்கூடியது. புகைப்படங்களை ப்ராசஸ் செய்ய neural networks இருக்கும்.

பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர் மூலம் இயங்கும் தன்மையானது. இவை 6 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி அளவிலான இன்டெர்னல் சேமிப்பு கொண்டதாக உள்ளது.

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

கேமராவைப் பொறுத்தவரை, இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கும். அதில் 12 எம்பி அளவிலான டூயல் பிக்சல் லென்ஸ் உடன் 16 எம்பி அளவிலான டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும்.

மேலும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் யூ.எஸ்.பி டைப் சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.

இது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம், மோஷன் சென்ஸ் மற்றும் டைட்டன் Titan M security module போன்றவற்றினையும் கொண்டுள்ளது.


பிக்சல் 4 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ ஸ்மூத் டிஸ்ப்ளேவினையும், பிக்சல் 4 எக்ஸ்எல் ஆனது 6.3 இன்ச் அளவிலான க்வாட் எச்டி+ ஸ்மூத் டிஸ்ப்ளேவினையும் கொண்டிருக்கும்.

இவற்றில் Ambient EQ அம்சம் உள்ளது. கூகுள் பிக்சல் 4 2800 எம்ஏஎச் பேட்டரி அளவினையும், கூகுள் பிக்சல் 4 எக்ஸ்எல் 3700 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil

அப்பாடி ஒரு வழியாக வெளியான கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள்!

TechNews Tamil