கடந்த சில ஆண்டுகளாக பல வகையான ஏமாற்றங்களை சந்தித்து வரும் Apple i Phone பிரியர்களுக்கான அட்டகாசமான தகவலொன்று வெளியாகியுள்ளது.
Applei Phone 2019 மாடல்களில் iPhone 10 தொடரில் நிகழ்த்தப்பட்ட மேம்படுத்தல்களை விட பெரிய அளவிலான செயல்திறன் மற்றும் கேமரா மேம்பாடுகளை ஆப்பிள் நிகழ்த்தியுள்ளது. அதில் மிகவும் நம்பமுடியாத ஒரு மேம்பாடாக அதன் மூன்று பின்பக்க கேமரா அமைப்பு திகழ்கிறது.
ஒருவழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 11 தொடரின் வழியாக டிரிபிள்-ரியர் கேமரா பந்தயத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆப்பிள் அதன் கேமராக்களில் 3D Sensor-ஐ இணைக்கும் என்பதால், ஐபோன் 11 மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிற தொடங்கிவிட்டது.

ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன்களில் அதன் A13 Bionic chip-ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 2019 மாடல்களில் “Taptic
Engine” எனும்
புதிய தொழில்நுட்பம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது 3D
Touch அம்சத்தை நீக்கும் என்றும்
கூறப்படுகிறது. இந்த இடத்தில், Haptic Touch ஆதரவாக ஆப்பிள் தனது மலிவு விலையிலான iPhone
XR ஸ்மார்ட்போனில் 3DTouch
அம்சத்தை அகற்றியது
கவனிக்கத்தக்கது.
நீண்ட காலமாகவே, ஆப்பிள் அதன் மெதுவான Lightning
port-ல் இருந்து விடுபட்டு USB
Type-C port-க்கு
மாறும் என்று வதந்திகள் பரவி வருகிறது. இம்முறையும் அது வதந்தியாகவே கடந்து
செல்லும்.
இந்த ஆண்டு குறைந்தது மூன்று
ஐபோன்கள் வெளியாகலாம். முன்னர் வெளியான ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர்
போன்றே இரண்டு ஐபோன்கள் AMOLED panel-களுடனும், ஒன்று LCD display உடனும் வெளியாகலாம்.