Mobile

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

விவோ நிறுவனம் விவோ வி15 என்ற புதிய மாடலை ரூ.28990 என்ற விலையில் அறிமுகம் செய்தது.

விவோ வி15 உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் அதன் புதிய டெக்னாலஜி, புதிய ஸ்னாப்டிராகன் 675 சிபியூ ஆகியவை ஆகும். இதில் உள்ள 32 எம்பி செல்பி கேமிரா பல அற்புதமான செல்பி ஷாட்களை எடுக்கும் திறன் கொண்டவை.

இந்த விவோ வீ15 மாடலில் மூன்று லென்ஸ்கள் கொண்ட பின் கேமிரா உள்ளது என்பதை பார்த்தோம். இவை 8 எம்பி வைட் ஆங்கிள், 5 எம்பி ஸ்டாண்டர்ட் லென்ஸ் மற்றும் 48 எம்பி குவாட் பிக்சல் சென்சார் ஆகியவை அடங்கியது. இதனால் இதில் கிடைக்கும் ரிசல்ட் பிரமாதமானது.

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

6.39 இன்ச் டிஸ்ப்லேவில் வைப்ரண்ட் வசதி கொண்ட இதில், மெல்லிய பெஸல் இருப்பதால் வீடியோ கேம் விளையாடும்போது சிறப்பானதாக இருக்கும்.

2019ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள சிறப்பான போன்களில் ஒன்றான இந்த வீவோ வீ15 மாடலில் மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் உண்டு. கேம் கிளப், டி.என்.டி மோட், மோட்டார் பைக் மோட், ஆகியவை இருப்பதால் பல பயன்கள் உள்ளது.

மிக நவீன பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இதில் இருப்பதால் பாதுகாப்பு குறித்த பயமில்லை. பயனாளிகள் போனை அன்லாக் செய்வதும் மிக எளிது.

விரல் ரேகையை கச்சிதமாக மெமரியாக வைத்து கொள்ளும் எனவே இந்த புதிய வீவோ வீ15 மாட நிச்சயமாக பயனாளிக்கு ஒரு பயனுள்ள மொபைலாக இருக்கும்.

டிரிபிள் லென்ஸ், செல்பி கேமிரா, எக்ஸ் பேக்டர்ஸ், மல்டிமீடியா வியூ, அமோல்ட் பேனல், மைக்ரோ யூஎஸ்பி 2.0, வேகமாக சார்ஜ் ஆகும் தன்மை , ஸ்னாப்டிராகன் 675 சிபியூ, புதிய குவால்கோம் சிப்செட் ஆகியவை போனின் உரிமையாளர்களுக்கு பெருமையை தரும்

Related posts

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிவிப்பினை வெளியிட்ட சியோமி நிறுவனம்!!

TechNews Tamil

அதிரடியாக இன்று அறிமுகமானது Realme XT!!

TechNews Tamil

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ள Mi நோட் 10 !!

TechNews Tamil