லைவ் ரிலே என்னும் தொழில்நுட்பம் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கென்றே, உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். இது வருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தது.
லைவ் ரிலே தொழில்நுட்பம் ஒருவரது மொபைல்போனில் என்ன செய்யுமென்றால், அவர் தொலைபேசி அழைப்பை பேசிக்கொண்டிருக்கும்போது, எதிரில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்து அதனை எழுத்து வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் திரையிடும்.

நாமாக பதிலை டைப் செய்து அனுப்பலாம், நாம் அளிக்கும் பதில் மீண்டும் ஒலி வடிவில் மாற்றப்பட்டு, நம் எதிரில் பேசக்கூடியவருக்கு சென்றடையும்.
இந்த தொழில்நுட்பம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், அவர்களுடன் மற்றவர்கள் தொலைபேசி அழைப்புகள் பேச எளிதான வண்ணம் அமையும். அவர்கள் மட்டுமின்றி, இந்த தொழில்நுட்பம், மேலும் பலருக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த லைவ் ரிலே தொழில்நுட்பத்திற்கு இணையதள் வசதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உங்களுக்கு எதிரில் பேசுபவர் ஒரு லேண்டுலைன் போனை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றாலும், இந்த லைவ் ரிலேயை பயன்படுத்திக்கொள்ளலாம்.