Information Technology

வீடியோ கால் அழைப்பின் போது அறையின் Back Ground- ஐ மறைக்கும் அம்சம்!!

மைக்ரோசாப்டின் ஸ்கைப் செயலியில் தற்போது ஒரு சிறப்புமிக்க அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உருவானதைத் தொடர்ந்து,  உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சக்கணக்கிலான உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உலகம் முழுவதிலும் ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் பல ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து  வேலை செய்து வருகின்றனர். மேலும் வேலை தொடர்பான மீட்டீங்குகளும்  வீடியோ அழைப்பு மற்றும் ஆடியோ அழைப்புகளிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

வீடியோ கால் அழைப்பின் போது அறையின் Back Ground- ஐ மறைக்கும் அம்சம்!!

அதாவது இந்த மாதிரியான நேரங்களில் வீடியோ கால் பேசும்போது, வீட்டின் அறை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இனி நீங்கள் உங்கள் அறையினை கட்டாயம் நேர்த்தியாக மாற்ற்த் தேவையில்லை. நமக்குப் பின்னணியில் உள்ள வீட்டின் அறையினை மறைத்துக்கொள்ளும் வகையில் இப்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இது ஸ்கைப் பயன்பாட்டின் iOS வெர்ஷன்களில் அறிமுகம் ஆகியுள்ளது. வீடியோ அழைப்பின்போது, பின்னணியில் உள்ள பேக்கிரௌண்டை பேக்கிரௌண்ட் ப்ளர் ஆப்ஷன் கொண்டு மறைக்கலாம்.

தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகமாகியுள்ள நிலையில் விரைவில் டெஸ்க்டாப் தளத்திலும் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகின்றது.

Related posts

விக்ரம் லேண்டரை படம் எடுக்க முடியவில்லை- நாசா!

TechNews Tamil

மலிவு விலையில் வோடபோன் அறிமுகம் செய்த 2 திட்டங்கள்!!

TechNews Tamil

விமானத்தில் வைபை சேவை… மத்திய அரசு அறிவிப்பு!

TechNews Tamil