சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களை இப்போது நாம் பார்க்க முடியாது, பல வகைகளில் சமூக வலைதளங்கள் நம்மை இணைக்கின்றன. அந்த வகையில் பேஸ்புக் உலக அளவில் பல மில்லியன் பயனர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
அதேபோல், அதற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக வாட்ஸ் அப் உலா வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ட்விட்டர், ஹலோ ஆப் என பல வலைதளங்கள் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டதாக உள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் ஒரு அம்சத்தினை வழங்க உள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தாங்கள் விரும்பாத ஃபாளோவரின் ப்ரோஃபைல் நீக்க நினைத்தால், இனி எளிதாக நம்மால் நீக்க முடியும்.
இதற்கான சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது, இந்த சோதனை முடிவடைந்தபின் இது விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதனை, ஃபாளோவரின் ப்ரோஃபைல் என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து, மெனு ஆப்ஷனில் Remove Follower பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் நீக்க விரும்பும் நபரை நீக்க முடியும்.