ஐபோன் வரிசையில், ஐபோன் 11 அறிமுகமாகி சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது. இது 6.1 இன்ச் Liquid Retina டிஸ்பிளே கொண்டும், ஆப்பிளின் புதிய A13 Bionic chip ப்ராசஸர் கொண்டும் இயங்கக் கூடியது. iPhone XR-ஐ விட ஒரு மணி நேரம் அதிக பேட்டரி ஆயுள் கொண்டுள்ளதாக உள்ளது.
ஐபோன் 11 அதன் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

எஃப் / 1.8 மற்றும் ஆப்டிகல் இமேஜ்
ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான
வைட்-அங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 மற்றும் 120- டிகிரி
ஃபீல்ட் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான
இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவையும் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இரட்டை பின்புற கேமராக்கள் 4கே வீடியோ பதிவை 60fps கொண்டு உள்ளது.
மேலும் முன் பக்க கேமராவினைப் பொறுத்தவரை ஐபோன் எக்ஸ்ஆரை விட சிறப்பாக செயல்படுகிறது.
செல்பீ கேமராவைப் பொறுத்தவரை 12 மெகாபிக்சல் கேமிரா உள்ளது.