ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டும் ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 13 முறையில் இயங்குகிறது.
5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது.
இந்த இரண்டு போன்களின் பின்புறத்திலும் மூன்று 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் அதனுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது.

இதில் மூன்று 12 மெகாபிக்சல் இமேஜ்
சென்சார்கள் உள்ளது, அவை எஃப் / 1.8 வைட்-ஆங்கிள், எஃப் / 2.4 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் எஃப் / 2.4 டெலிஃபோட்டோ லென்ஸ்கள் ஆகும்.
முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இது ஸ்மார்ட் எச்டிஆர், 4கே வீடியோ ரெக்கார்டிங்
மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்கள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது.
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸுடன் ஒப்பிடும்போது 4 மணிநேரம் அதிக பேட்டரி கிடைக்கும் என்று தெரிகிறது.